பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' வெளியாகி ஓராண்டு நிறைவு: கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்

பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' வெளியாகி ஓராண்டு நிறைவு: கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்

இளம் தலைமுறை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற 'டியூட்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளது. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, மற்றும் 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார் இணைந்து நடித்த இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காதல், நட்பு, குடும்ப உணர்வுகள் மற்றும் நகைச்சுவை நிறைந்த கலகலப்பான திரைக்கதையால் 'டியூட்' திரையரங்குகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. ஒரு வருடம் கடந்த நிலையிலும் இந்த படத்தின் பாடல்களும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ரீல்ஸ்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வரும் இந்த படத்தின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளனர். பிரதீப் ரங்கநாதனின் அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

· Prosathish

பழைய செய்திகள்