பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் 'மகாகாளி': இயக்குனர் பூஜா கொல்லுருவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் 'மகாகாளி': இயக்குனர் பூஜா கொல்லுருவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (PVCU) பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் 'மகாகாளி' திரைப்படத்தின் இயக்குனர் பூஜா கொல்லுருவுக்கு படக்குழுவினர் சிறப்பு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ வாழ்த்து போஸ்டரை மக்கள் தொடர்பாளர் டயமண்ட் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஹனுமான் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் வர்மா மேற்பார்வையில் உருவாகும் இப்படத்தில் அக்ஷய் கண்ணா, ஸ்ரேயா ரெட்டி, குஷ்பு சுந்தர், ரோஹித் சரப், நாசர், முரளி சர்மா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கின்றனர். இந்திய புராணவியல் பின்னணியில் அதிரடி காவியமாக இப்படம் செதுக்கப்பட்டு வருகிறது. பெண் இயக்குனரான பூஜாவின் உழைப்பும் கலைத்தாகமும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கும் என்று படக்குழுவினர் பாராட்டியுள்ளனர். ஆர்.கே.டி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 8 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

· Idiamondbabu

பழைய செய்திகள்