தமிழக திரையரங்குகளில் அக்டோபர் 9 அன்று வெளியாகிறது பிரேமதா ஊராலி: ஏபி இன்டர்நேஷனல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அன்பும் குடும்ப உணர்வுகளும் நிறைந்த பிரேமதா ஊராலி திரைப்படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக பிரபல விநியோக நிறுவனமான ஏபி இன்டர்நேஷனல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 9 அன்று இப்படம் தமிழ்நாட்டில் திரைக்கு வருகிறது. வெண்ணிலா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரங்காயண ரகு, ஸ்ரீ ராம், மனோஜ் குமார் மற்றும் தபஸ்வினி பூனாச்சா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாசமும் அக்கறையும் நிறைந்த கதைக்களத்தோடு, ரசிகர்களை கவரும் எமோஷனல் பொழுதுபோக்கு படைப்பாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. ஏபி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பரந்த விநியோகத்தின் மூலம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. உணர்வுப்பூர்வமான நல்ல கதைகளை வரவேற்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, அக்டோபர் 9 அன்று திரையரங்குகளில் ஒரு சிறப்பான அனுபவமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Apifilms