கன்னடப் படம் 'பிரேமத ஊரல்லி': அக்டோபர் 9 உலகம் முழுவதும் ரிலீஸ்!

கன்னடப் படம் 'பிரேமத ஊரல்லி': அக்டோபர் 9 உலகம் முழுவதும் ரிலீஸ்!

கன்னடத் திரையுலகின் புதிய காதல் திரைப்படமான 'பிரேமத ஊரல்லி' (Premada Ooralli) வரும் அக்டோபர் 9ஆம் தேதி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக சினிமா பிஆர்ஓ வம்சி சேகர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். கன்னட மண்ணின் எழில்மிகு கலாச்சாரத்தையும் கிராமத்து மனிதர்களின் தூய்மையான காதலையும் திரையில் நேர்த்தியாக வடிக்கிறது இப்படம். உள்ளூர் சினிமா ரசிகர்களைத் தாண்டி, பான் இந்தியா அளவிலும் சர்வதேசத் திரைகளிலும் கன்னட சினிமாவின் உணர்வுபூர்வமான கதைக்களங்களைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் விரிவான வெளியீட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. படத்தின் மெல்லிசைப் பாடல்களும் எதார்த்தமான கிராமத்துக் காட்சிகளும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அழகிய காதல் மற்றும் குடும்பப் பின்னணியில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள 'பிரேமத ஊரல்லி' திரைப்படம், வரும் அக்டோபர் 9ஆம் தேதி முதல் உலகெங்கும் உள்ள முன்னணி திரையரங்குகளில் ரசிகர்களின் பார்வைக்கு வரவுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்