ஆஹா ஓடிடியில் வெளியாகும் பிருத்விராஜின் 'கலீஃபா': அக்டோபர் 9 முதல் தமிழ், தெலுங்கில் ஸ்ட்ரீமிங்

ஆஹா ஓடிடியில் வெளியாகும் பிருத்விராஜின் 'கலீஃபா': அக்டோபர் 9 முதல் தமிழ், தெலுங்கில் ஸ்ட்ரீமிங்

மலையாளத் திரையுலகின் முன்னணி நாயகன் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'கலீஃபா' (Khalifa). வைசாக் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 9 முதல் ஆஹா தமிழ் மற்றும் ஆஹா தெலுங்கு ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளதாக விநியோக நிறுவனமான ஏபி இண்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தங்கக் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜினு வி ஆபிரகாம் திரைக்கதை எழுதியுள்ளார். மாளவிகா சர்மா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்தின் அதிரடி சண்டை காட்சிகள் சினிமா ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. திரையரங்குகளில் வெளியான போது ஆக்ஷன் பிரியர்களின் கவனத்தைப் பெற்ற கலீஃபா, தற்போது தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிஜிட்டல் தளத்தில் வெளியாவது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

· Apifilms

பழைய செய்திகள்