பிரித்விராஜின் அதிரடி ஆக்ஷன் படம் 'கலீஃபா': அக். 9 முதல் முக்கிய ஓடிடி தளங்களில் ரிலீஸ்!
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில், இயக்குநர் வைசாக் இயக்கத்தில் உருவான 'கலீஃபா' திரைப்படம் நாளை அக்டோபர் 9 முதல் ஒரே நேரத்தில் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகிறது. இதனை இப்படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமம் பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரைம் வீடியோ, லயன்ஸ்கேட் ப்ளே, ஆஹா, சிம்பிளி சவுத், ஸ்டார்ஸ்ப்ளே மற்றும் மனோரமா மேக்ஸ் உள்ளிட்ட பல முக்கிய ஓடிடி தளங்களில் இப்படம் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. ஜினு வி. ஆபிரகாம் திரைக்கதை எழுதியுள்ள இந்த அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். மேலும் மாளவிகா சர்மா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த அதிரடித் திரைப்படம், தற்போது பல்வேறு முன்னணி டிஜிட்டல் தளங்கள் வழியே உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைச் சென்றடைய உள்ளது. இதனால் பிரித்விராஜ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் நாளைக்காகக் காத்திருக்கின்றனர்.
· Apifilms