அமேசான் பிரைமில் கலக்கும் பிரித்விராஜின் கலீஃபா: இந்தியாவில் 2-வது இடத்தில் ட்ரெண்டிங்!

அமேசான் பிரைமில் கலக்கும் பிரித்விராஜின் கலீஃபா: இந்தியாவில் 2-வது இடத்தில் ட்ரெண்டிங்!

பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவான அதிரடி திரைப்படமான கலீஃபா (Khalifa), தற்போது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி இந்திய அளவில் அதிகம் பார்க்கப்படும் டாப் 10 திரைப்படங்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து ட்ரெண்டிங்கில் இருப்பதாக ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இயக்குநர் வைசாக் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஜினு வி ஆபிரகாம் கதை எழுதியுள்ளார். மாளவிகா சர்மா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, ஜோமன் டி ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரித்விராஜின் அதிரடி திரை இருப்பு மற்றும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. திரையரங்குகளை தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்திலும் இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்திய அளவில் அமேசான் பிரைம் வீடியோவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து வரவேற்பைப் பெற்று வரும் கலீஃபா திரைப்படத்தை ரசிகர்கள் இப்போது பிரைம் வீடியோ தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

· Apifilms

பழைய செய்திகள்