ஓடிடியில் வெளியான பிருத்விராஜின் 'கலீஃபா': எந்தெந்த தளங்களில் பார்க்கலாம்?

ஓடிடியில் வெளியான பிருத்விராஜின் 'கலீஃபா': எந்தெந்த தளங்களில் பார்க்கலாம்?

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான அதிரடி கிரைம் த்ரில்லர் திரைப்படமான 'கலீஃபா', தற்போது பல்வேறு முன்னணி ஓடிடி தளங்களில் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருவதாக ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரபல இயக்குநர் வைசாக் இயக்கத்தில் ஜினு வி. ஆபிரகாம் திரைக்கதையில் உருவான இப்படத்தில் பிருத்விராஜுடன் இணைந்து மாளவிகா சர்மா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜோமோன் டி. ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். சர்வதேச தாதா பின்னணியிலான அதிரடிக் கதைகளமும், விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளும் சினிமா ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அமேசான் பிரைம் வீடியோ, லயன்ஸ்கேட் பிளே, ஆஹா, சிம்ப்ளி சவுத், ஸ்டார்ஸ்பிளே, மனோரமா மேக்ஸ் மற்றும் ஏபி இன்டர்நேஷனல் சவுத் சினிமா உள்ளிட்ட பல முக்கிய தளங்களில் இப்படம் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் இப்படத்தைக் காணத் தவறிய மலையாள சினிமா ரசிகர்கள் தற்போது தங்களுக்குப் பிடித்த ஓடிடி தளத்தில் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்.

· Apifilms

பழைய செய்திகள்