அமேசான் பிரைமில் வெளியானது பிருத்விராஜின் 'கலீஃபா': தமிழிலும் ஸ்ட்ரீமிங் தொடக்கம்!
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வைசாக் இயக்கத்தில் உருவான விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் 'கலீஃபா'. இத்திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் கிடைப்பதாக ஏபி இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. ஜினு வி ஆபிரகாம் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் மாளவிகா சர்மா, நீல் நிதின் முகேஷ், சூரஜ் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிருத்விராஜின் ஆக்ஷன் அவதாரம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை திரையரங்க வெளியீட்டின் போதே ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. தற்போது தீபாவளி விடுமுறை வரவுள்ள வேளையில், வீட்டில் இருந்தபடியே அதிரடி ஆக்ஷன் படங்களை ரசிக்க விரும்பும் ரசிகர்களுக்கு பிரைம் வீடியோவில் தமிழிலும் வெளியாகியுள்ள 'கலீஃபா' நல்ல தேர்வாக அமைந்துள்ளது.
· Apifilms