சினிமாவுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளேன்: தயாரிப்பாளர் கண்ணன் ரவி அதிரடி பேட்டி!

சினிமாவுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளேன்: தயாரிப்பாளர் கண்ணன் ரவி அதிரடி பேட்டி!

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் கண்ணன் ரவி தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் தயாரிப்புத் திட்டங்கள் குறித்து சமீபத்திய நேர்காணலில் வெளிப்படையாகப் பேசியுள்ளார். பேங் பேங் திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் டெக்ஸ்லா திரைப்படத்தை வரும் ஜனவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் சிங் குலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஒரு கைதியின் டைரி புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். அடுத்தடுத்து புதிய களங்களில் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தனது நிறுவனம் தீவிரமாக இயங்கி வருவதை அவர் உறுதிப்படுத்தினார். சினிமா தயாரிப்பு முதலீடு குறித்துப் பேசிய கண்ணன் ரவி, திரைப்படத் தயாரிப்பிற்காகவே தனியாக 200 கோடி ரூபாயை ஒதுக்கி வைத்துள்ளேன். இந்த பணம் திரும்பக் கிடைத்தால் அது என் அதிர்ஷ்டம், கிடைக்காவிட்டால் அது எப்போதும் எனக்குரிய பணமே இல்லை என்ற மனப்பக்குவத்துடன்தான் சினிமாவுக்குள் வந்துள்ளேன் என்று கூறி சினிமா வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

· @_movietamil

பழைய செய்திகள்