பிறந்தநாள் கொண்டாடும் தயாரிப்பாளர் எஸ். கிருஷ்ணா: இயக்குனராக அறிமுகமாகும் 'ஹை' படம் நவம்பர் 27ல் ரிலீஸ்!

பிறந்தநாள் கொண்டாடும் தயாரிப்பாளர் எஸ். கிருஷ்ணா: இயக்குனராக அறிமுகமாகும் 'ஹை' படம் நவம்பர் 27ல் ரிலீஸ்!

பிரபல திரைப்பட நிர்வாகத் தயாரிப்பாளர் எஸ். கிருஷ்ணாவின் பிறந்தநாளையொட்டி, அவருக்குத் திரையுலகினர் மற்றும் 'ஜனவரி 12 விடுதலை' படக்குழுவினர் தங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்த எஸ். கிருஷ்ணா, தற்போது 'ஹை' (High) என்ற புதிய திரைப்படத்தின் மூலம் இயக்குனராகத் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் அறிவிப்பு ரசிகர்களிடையே நல்ல ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனராக அறிமுகமாகும் இவரது முதல் திரைப்படமான 'ஹை', வரும் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்