தமிழ் படங்களுக்கு ஆடியோ விளக்கம் மற்றும் சப்டைட்டில் வசதி: கியூப் சினிமாவின் புதிய முயற்சி!
திரைப்படங்கள் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மக்களையும் எளிதாகச் சென்றடையும் நோக்கில், இந்த வாரத்திற்கான திரைப்படங்களுக்கான ஆடியோ விளக்கம் மற்றும் சப்டைட்டில் வசதிகளை கியூப் சினிமா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி 'என்ன விலை', 'நல்ல படம்', 'பாரிஸ் கஃபே', 'வள்ளி மலை வேலன்' உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு தமிழ் மொழியிலான ஆடியோ விளக்கம் மற்றும் க்ளோஸ்டு கேப்ஷன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 'என்ன விலை' படத்திற்கு ஆங்கிலம் மற்றும் அரபி சப்டைட்டில்களும் சேர்க்கப்பட்டுள்ளன. சினிடப்ஸ் செயலி மூலம் இந்த வசதிகளைப் பார்வையாளர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களில் நேரடியாக கேட்டு அனுபவிக்க முடியும். திரையரங்குகளில் படம் ஓடும்போது அதற்கேற்ப ஒத்திசைந்து செயல்படும் இந்த தொழில்நுட்பம் சினிமா ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பார்வை மற்றும் கேட்கும் குறைபாடு உள்ளவர்களும் எந்தவொரு தடையுமின்றி திரையரங்குகளில் படங்களைக் கண்டு ரசிக்கும் வகையில் சினிமா தொழில்நுட்பத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் இத்தகைய முயற்சிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
· Qubecinema