பன்மொழி திரைப்படங்களை ரசிகர்களிடம் சேர்க்கும் கியூப் சினிமாவின் புதிய வெளியீடுகள்
திரைப்படங்களை மொழி எல்லைகளைத் தாண்டி உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் முன்னணி நிறுவனமான கியூப் சினிமா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தயாரித்துள்ள இந்த வாரத்திற்கான பன்மொழி உள்ளடக்கப் பட்டியல் மற்றும் அணுகல்தன்மை அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 'இம்மார்டல்', 'ஐ ஆம் கேம்', 'ரம்பா ஊர்வசி மேனகா', 'ரோமஞ்சகம்', '4 இடியட்ஸ்' உள்ளிட்ட 7 முன்னணி திரைப்படங்களுக்கு ஆங்கிலம், மலாய் மற்றும் அரபு மொழிகளில் துல்லியமான சப்டைட்டில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய பார்வையாளர்களும் சினிமா அனுபவத்தை முழுமையாக ரசிக்கும் வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிரத்யேக ஆடியோ விவரிப்புகள் மற்றும் க்ளோஸ்டு கேப்ஷன் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சினிமாவை அனைவரும் சமமாக அனுபவிக்கும் வகையில் சினேடப்ஸ் செயலி மூலம் இந்த சிறப்பு ஒலித் தடங்கள் ரசிகர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சினிமா ஆர்வலர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
· Qubecinema