தீபாவளி படங்களுக்கு க்யூப் சினிமாவின் புதிய சர்வதேச சப்டைட்டில் வசதி

தீபாவளி படங்களுக்கு க்யூப் சினிமாவின் புதிய சர்வதேச சப்டைட்டில் வசதி

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் முன்னணி திரைப்படங்களுக்கு சர்வதேச சப்டைட்டில் மற்றும் ஆடியோ விவரிப்பு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக க்யூப் சினிமா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகெங்கும் உள்ள பல்வேறு மொழி ரசிகர்கள் மற்றும் பார்வை, செவித்திறன் சவால் கொண்ட பார்வையாளர்களுக்கும் முழுமையான சினிமா அனுபவம் எளிதாக சென்றடையும். அதன்படி 'சீன்' திரைப்படத்திற்கு அரபு மற்றும் பிரெஞ்சு சப்டைட்டில்களும், 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு ஆங்கிலம் மற்றும் அரபு சப்டைட்டில்களும், 'டிஸ்கோ' படத்திற்கு அரபு சப்டைட்டிலும் வழங்கப்படுகின்றன. மேலும் 'சீன்' மற்றும் 'மூக்குத்தி அம்மன் 2' படங்களுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் ஆடியோ விவரிப்பு மற்றும் க்ளோஸ்டு கேப்ஷன் வசதிகள் திரையரங்குகளில் செய்யப்பட்டுள்ளன. சினி டப்ஸ் செயலி வழியாக பார்வையாளர்கள் இந்த கூடுதல் வசதிகளை தங்களது ஸ்மார்ட்போன் மூலம் திரையரங்குகளில் நேரடியாக அனுபவிக்க முடியும் என்று க்யூப் சினிமா தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை ரிலீஸ் படங்களை உலக அரங்கில் கொண்டு சேர்க்கும் நவீன முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

· Qubecinema

பழைய செய்திகள்