கோவையில் பிரம்மாண்ட எபிக் திரையரங்குகள் அறிமுகம்: கற்பகம் கிராண்ட்பிளெக்ஸில் கியூப் சினிமா புதிய சாதனை!
தென்னிந்தியாவின் முன்னணி சினிமா தொழில்நுட்ப நிறுவனமான கியூப் சினிமா, கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் கிராண்ட்பிளெக்ஸ் திரையரங்க வளாகத்தில் தங்களது அதிநவீன பிரீமியம் 'எபிக்' (EPIQ) மற்றும் 'எபிக் லக்சன்' (EPIQ Luxon) ஆகிய இரண்டு பிரம்மாண்ட திரைகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சினிமா ரசிகர்களுக்கு மிகச்சிறந்த காட்சி அனுபவத்தையும், நவீன லேசர் புரொஜெக்ஷன் மற்றும் டால்பி அட்மாஸ் பிரம்மாண்ட ஒலி அமைப்பையும் வழங்கும் வகையில் இந்த புதிய பிரீமியம் திரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கோயம்புத்தூர் நகரம் பிரம்மாண்ட சினிமா கொண்டாட்டங்களின் புதிய தலைநகரமாக உருவெடுத்துள்ளதாக கியூப் சினிமா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. பிரம்மாண்ட அகன்ற திரையில் படங்களை பார்க்கும் சுகம் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும். புதிய பிளாக்பஸ்டர் திரைப்படங்களை மிகச்சிறந்த நவீன திரையரங்கு அனுபவத்துடன் காண விரும்பும் கோவை மற்றும் கொங்கு மண்டல சினிமா ரசிகர்களுக்கு இந்த புதிய எபிக் திரைகள் சிறந்த தேர்வாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
· Qubecinema