ராவடி படத்தின் அட்ரா பரமா பாடல் வெளியீடு: அறிவு குரலில் அதிரடி கானா!

ராவடி படத்தின் அட்ரா பரமா பாடல் வெளியீடு: அறிவு குரலில் அதிரடி கானா!

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் 'ராவடி' (Raawadi) திரைப்படத்தின் முதல் பாடலான 'அட்ரா பரமா' தற்போது இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜென் மார்ட்டின் இசையில் உருவாகியுள்ள இந்த அதிரடி பாடலை ராப் கலைஞர் அறிவு பாடியுள்ளார். விஜிக்ஜித் இயக்கும் இந்த படத்தில் மலையாள முன்னணி நடிகர் பாசில் ஜோசப், அக்‌ஷய் குமார், ஜாஃபர் சாதிக், நோபல் ஜேம்ஸ், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். உதய் எழுதியுள்ள வரிகளுக்கு அறிவின் தனித்துவமான குரல் பாடல் முழுவதும் அனல் பறக்கும் எனர்ஜியைக் கொடுத்துள்ளது. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்