தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர் கவுன்சிலை துவங்கி வைத்தார் ராதிகா சரத்குமார்

தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர் கவுன்சிலை துவங்கி வைத்தார் ராதிகா சரத்குமார்

தென்னிந்திய திரையுலகின் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்களை ஒருங்கிணைக்கும் புதிய அமைப்பான 'டாப்காஸ்' (TOPCOS) முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொலைக்காட்சி டிஜிட்டல் மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TTPA) கவுரவத் தலைவரான நடிகை ராதிகா சரத்குமார் இந்த அமைப்பை முறைப்படி தொடங்கி வைத்துள்ளார் என மூத்த மக்கள் தொடர்பாளர் நிக்கில் முருகன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு முக்கிய தென்னிந்திய மொழித் தயாரிப்பாளர்களும் இதில் கைகோர்த்துள்ளனர். டிஜிட்டல் தளங்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையேயான பணிகளை ஒருங்கிணைக்கவும், தயாரிப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த புதிய கூட்டணி வழிவகை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு மொழிகளைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்வில் உற்சாகமாகப் பங்கேற்றனர். தென்னிந்திய டிஜிட்டல் ஊடகத் துறையில் வரவிருக்கும் புதிய மாற்றங்களுக்கும் தயாரிப்பாளர்களின் கூட்டு முயற்சிக்கும் இந்த தொடக்கம் வலுவான அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Nikil Murukan

பழைய செய்திகள்