ராகவா லாரன்ஸின் பிறந்தநாளில் வெளியான மகாவீர் கர்ணா அப்டேட்: பிரம்மாண்ட காவியப் படத்தில் கர்ணனாக மாஸ் என்ட்ரி!
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் மகாவீர் கர்ணா படத்தின் சிறப்பு வாழ்த்துப் பதிவை தயாரிப்பு நிறுவனமான பென் மூவிஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. கர்ணனாக ராகவா லாரன்ஸ் களமிறங்கும் இந்த வரலாற்றுப் படைப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகும் இந்த பிரம்மாண்ட நேரடி ஆக்ஷன் திரைப்படத்தை ஜெயந்திலால் கடாவின் பென் மூவிஸ், நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஃபிலிம் ஹவுஸ் இணைந்து தயாரிக்கின்றன. மகாபாரதத்தின் வீர நாயகனான கர்ணனின் வீரத்தையும் தியாகத்தையும் திரையில் உயிர்ப்பிக்கும் வகையில், தீவிரமான தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்ட போர்க்களக் காட்சிகள் மற்றும் அதிரடி சண்டை வடிவமைப்புடன் உருவாகி வரும் மகாவீர் கர்ணா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. லாரன்ஸின் இந்த புதிய அவதாரம் அவரது ரசிகர்களுக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.
· Penmovies