மீண்டும் இயக்குநராக களமிறங்கும் ராஜ் பி ஷெட்டி: மங்களூரில் ரகசியமாக நடந்த படப்பிடிப்பு!

மீண்டும் இயக்குநராக களமிறங்கும் ராஜ் பி ஷெட்டி: மங்களூரில் ரகசியமாக நடந்த படப்பிடிப்பு!

கன்னட திரையுலகின் தனித்துவமான படைப்பாளியான ராஜ் பி ஷெட்டி (Raj B Shetty), மீண்டும் இயக்குநராகக் களமிறங்கியுள்ள புதிய திரைப்படம் குறித்த ஆச்சரியத் தகவல் வெளியாகியுள்ளது. எந்தவித முன்கூட்டிய ஆரவாரமும் இன்றி, மங்களூரில் சுமார் 30 நாட்களுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு ரகசியமாக நடைபெற்று முடிந்துள்ளது. 'ஒந்து மொட்டேய கதெ', 'கருட கமன விருஷப வாஹன' ஆகிய படங்கள் மூலம் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த ராஜ் பி ஷெட்டி, சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அவர் மீண்டும் இயக்கத்திற்குத் திரும்பியுள்ளது திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் கதைக்களம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மங்களூரின் மண் வாசனையோடு உருவாகும் இந்த ரகசியப் படம் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு தரமான திரை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

· @xpresscinema

பழைய செய்திகள்