மும்பை படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி, அமிதாப் கூட்டணி: தலைவர் 170 படக்குழு வெளியிட்ட அப்டேட்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து நடித்த 'தலைவர் 170' திரைப்படத்தின் மும்பை படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 33 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்த தருணத்தை கொண்டாடும் வகையில், அவர்கள் கட்டித்தழுவி நிற்கும் நெகிழ்ச்சியான புகைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. த.செ. ஞானவேல் இயக்கும் இப்படத்தில் இவ்விரு ஜாம்பவான்களும் நேருக்கு நேர் மோதும் அனல் பறக்கும் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் மீண்டும் ஒன்றாகத் திரையில் தோன்றுவது இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய விருந்தாக அமையவுள்ளது. அனிருத் இசையமைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மும்பை ஷெட்யூல் முடிவடைந்ததை ஒட்டி வெளியான இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளி வருகிறது.
· Lyca Productions