மலேசியாவில் ரஜினியின் 'அண்ணாத்த' கொண்டாட்டம்: ஏஇஎஸ்பிகேஜே நிறுவனத்துடன் கியூப் கூட்டணி!

மலேசியாவில் ரஜினியின் 'அண்ணாத்த' கொண்டாட்டம்: ஏஇஎஸ்பிகேஜே நிறுவனத்துடன் கியூப் கூட்டணி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்குத் தீவிர ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நாடுகளில் ஒன்றான மலேசியாவில் 'அண்ணாத்த' திரைப்படத்தை வெளியிடுவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கியூப் சினிமா நிறுவனம் தனது உள்ளூர் கூட்டாளியான ஏஇஎஸ்பிகேஜே (AESBKJ) நிறுவனத்துடன் இணைந்து மலேசியா முழுவதும் படத்தை வெளியிடவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள அண்ணாத்த திரைப்படம் மலேசியத் தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பிரபல திரையரங்கு வளாகங்கள் அனைத்திலும் இப்படத்தைத் திரையிட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் ரஜினி படங்களுக்கு எப்போதுமே திருவிழா போன்ற வரவேற்பு இருக்கும் என்பதால், சிறப்பு முதல் காட்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Qubecinema

பழைய செய்திகள்