அமெரிக்காவின் மார்கஸ் மற்றும் ஆப்பிள் திரையரங்குகளில் அண்ணாத்த: திரையரங்கு பட்டியல் இதோ!

அமெரிக்காவின் மார்கஸ் மற்றும் ஆப்பிள் திரையரங்குகளில் அண்ணாத்த: திரையரங்கு பட்டியல் இதோ!

அமெரிக்காவில் உள்ள பிரபல மார்கஸ் தியேட்டர்ஸ் மற்றும் ஆப்பிள் சினிமாஸ் திரையரங்குகளில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' வெளியாகவுள்ள திரையரங்கு பட்டியலை க்யூப் சினிமா அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளது. வட அமெரிக்காவில் ரிலீஸ் பரப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த புதிய திரையரங்குகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவில் பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. குடும்பங்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் உணர்வுபூர்வமான பொழுதுபோக்கு திரைப்படமாக அண்ணாத்த அமைந்துள்ளதால், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் படம் பார்க்க அமெரிக்கத் தமிழ் மக்கள் ஆவலுடன் திட்டமிட்டு வருகின்றனர். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பெரும் பட்டாளமே இதில் நடித்துள்ளனர். இயக்குநர் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் வெளிவரும் அண்ணாத்த திரைப்படத்தின் அமெரிக்கத் திரையரங்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூடுதல் திரையரங்குகள் சேர்க்கப்பட்டிருப்பது அங்குள்ள ரசிகர்களுக்கு பெரும் வசதியாகவும் உற்சாகமாகவும் அமைந்துள்ளது.

· Qubecinema

பழைய செய்திகள்