அமெரிக்காவில் அண்ணாத்த வரலாற்று சாதனை: சினிமார்க் எக்ஸ்டி பிரீமியர் காட்சிகளில் புதிய உச்சம்!
இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக அமெரிக்காவின் பிரபல சினிமார்க் எக்ஸ்டி திரைகளில் அதிக எண்ணிக்கையிலான பிரீமியர் காட்சிகளைப் பெற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' புதிய சாதனை படைத்துள்ளதாக க்யூப் சினிமா அறிவித்துள்ளது. சர்வதேச அரங்கில் தமிழ் சினிமாவின் சந்தை மதிப்பு எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதற்கு இது மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது. நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவில் சிறப்பு பிரீமியர் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. பிரீமியர் தினத்தில் மட்டும் பிரத்யேகமாக எக்ஸ்டி பிரம்மாண்ட திரைகளில் படம் ஒளிபரப்பப்பட உள்ளது அமெரிக்க வாழ் ரசிகர்களிடையே உச்சக்கட்ட உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிநவீன ஒலி மற்றும் ஒளி அமைப்பில் ரஜினியின் அதிரடி காட்சிகளைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வட அமெரிக்க பாக்ஸ் ஆபிசில் முதல் நாளிலேயே வசூல் வேட்டை நடத்தும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பல இடங்களில் அரங்குகள் நிரம்பி வழிகின்றன.
· Qubecinema