கூலி படத்தின் மெகா வியாபாரம்: ரிலீசுக்கு முன்பே சன் பிக்சர்ஸுக்கு கோடிகளில் லாபம்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' திரைப்படத்தின் உத்தேச பட்ஜெட் மற்றும் பிசினஸ் விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் வெளியீட்டிற்கு முன்பே பெரும் லாபத்தை ஈட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 355 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம், திரையரங்கு உரிமம், ஓடிடி, சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமங்கள் என அனைத்தையும் சேர்த்து மொத்தம் 530 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரிலீசுக்கு முன்னரே சுமார் 174 கோடி ரூபாய் வரை லாபம் உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்தின் அசைக்க முடியாத பாக்ஸ் ஆபிஸ் செல்வாக்கும், லோகேஷ் கனகராஜின் விறுவிறுப்பான திரைக்கதையும் இணைந்திருப்பது இப்படத்திற்கான சர்வதேச எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதன் வெற்றி அடுத்ததாக வரவிருக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வர்த்தக மதிப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது.
· @_movietamil