முதல் நாளில் ரூ. 151 கோடி வசூல்: புதிய சாதனை படைத்த ரஜினிகாந்தின் 'கூலி'!

முதல் நாளில் ரூ. 151 கோடி வசூல்: புதிய சாதனை படைத்த ரஜினிகாந்தின் 'கூலி'!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 151 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படம் என்ற பெருமையை 'கூலி' பெற்றுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியான இப்படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர் ஆகியோரின் சிறப்பான நடிப்பும், ரஜினியின் அசாத்தியமான மாஸ் திரைப் பிரசன்னமும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, வளைகுடா நாடுகள், மலேசியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளிலும் 'கூலி' படத்திற்கு திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகின்றன. வரும் வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் மேலும் பல புதிய உச்சங்களைத் தொடும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

· Sun Pictures

பழைய செய்திகள்