கூலி படத்தின் சவுண்ட் மிக்ஸ் நிறைவு: திரையரங்குகளில் பட்டையைக் கிளப்ப தயாராகும் ரஜினி

கூலி படத்தின் சவுண்ட் மிக்ஸ் நிறைவு: திரையரங்குகளில் பட்டையைக் கிளப்ப தயாராகும் ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 'கூலி' படத்தின் சவுண்ட் மிக்ஸ் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஒலி வடிவமைப்பு நிறுவனமான சின்க் சினிமா தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் இறுதி ஒலி அமைப்புக் கலவை திரையரங்குகளில் ரசிகர்களுக்கு அசாத்திய திரையனுபவத்தைக் கொடுக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். மேலும் பாலிவுட் நட்சத்திரம் ஆமிர் கான், தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா, கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பான் இந்தியா நட்சத்திரங்களின் சங்கமத்தால் உருவான இந்த ஆக்‌ஷன் விருந்து, ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கக் குறிப்பிலிருந்து இறுதிக் கட்ட சவுண்ட் மிக்ஸ் வரை ஒட்டுமொத்தக் குழுவும் அர்ப்பணிப்புடன் உழைத்து இந்த ஒலிப்பதிவை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு அனிருத்தின் இசையும் இந்த சவுண்ட் எஃபெக்ட்களும் ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Synccinema

பழைய செய்திகள்