‘ஜெயிலர் 2’ ஆல்பத்திற்கு 300 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்கள்: அனிருத் இசையில் சாதனை படைத்ததாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

‘ஜெயிலர் 2’ ஆல்பத்திற்கு 300 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்கள்: அனிருத் இசையில் சாதனை படைத்ததாக சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் பாடல்கள் அனைத்து இசைத் தளங்களிலும் 300 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் பாகமான ‘ஜெயிலர்’ படத்தில் அனிருத் இசையமைத்த பாடல்கள் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ பட ஆல்பமும் வெளியானது முதல் இசை ரசிகர்களைக் கட்டிப்போட்டு வருகிறது. ரஜினிகாந்துடன் வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனிருத்தின் துள்ளலான பின்னணி இசையும் அதிரடிப் பாடல்களும் இணையத்தில் தொடர்ச்சியாக ரீல்ஸ் மற்றும் வீடியோக்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போது 300 மில்லியன் ஸ்ட்ரீம்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ள இந்த உற்சாகத்தை ரஜினி ரசிகர்கள் மற்றும் அனிருத் பிரியர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

· Anirudhofficial

பழைய செய்திகள்