பிரிட்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 வரலாற்று சாதனை: 4டிஎக்ஸ் மற்றும் மிட்நைட் பிரீமியர் காட்சிகள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம், இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான முறையில் வெளியாகிறது. இப்படத்தின் பிரிட்டன் ரிலீஸ் உரிமையைப் பெற்றுள்ள அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், இன்னும் 24 மணி நேரத்திற்குள் நள்ளிரவு சிறப்பு காட்சிகள் தொடங்கவுள்ளதாக உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. பிரிட்டன் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் ரஜினியின் திரைப்படத்திற்கு மிக அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 4டிஎக்ஸ் (4DX) மற்றும் சூப்பர்ஸ்கிரீன் வடிவங்களில் நள்ளிரவு காட்சிகளுடன் தொடங்கும் முதல் காட்சியைப் பார்க்க வெளிநாட்டு ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். அனிருத் இசையமைப்பில் வெளியாகும் இப்படத்தில் வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே களம் கண்டுள்ளது. திரையில் 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்ற டைட்டில் கார்டு மின்னும்போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி ஆர்ப்பரிக்கும் அந்த மாயாஜால தருணத்தை அனுபவிக்க உலகம் முழுவதும் டிக்கெட் முன்பதிவு ஜெட் வேகத்தில் தீர்ந்து வருகிறது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜெயிலர் 2 வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· @_movietamil