பாக்ஸ் ஆபிசில் ஜெயிலர் 2 ருத்ரதாண்டவம்: ஒரே மணி நேரத்தில் 68 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை

பாக்ஸ் ஆபிசில் ஜெயிலர் 2 ருத்ரதாண்டவம்: ஒரே மணி நேரத்தில் 68 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு திரையரங்குகளில் அசுர வேகத்தில் விற்பனையாகி வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளன. பிரீமியர் காட்சிகள் மற்றும் தமிழகத்தின் முதல் காட்சிகளுக்குப் பிறகு ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக புக்மைஷோ போன்ற ஆன்லைன் செயலிகளில் ஒரே மணி நேரத்தில் 68,500க்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படம் பார்க்க ஆர்வம் காட்டியுள்ளதால் முன்பதிவு அட்டவணைகள் அனைத்தும் மளமளவென நிரம்பி வருகின்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது பாகத்திலும் ரஜினியின் திரையரங்கு மாயாஜாலம் ரசிகர்களை மெய்மறக்க வைத்துள்ளது. வார இறுதி நாட்களில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்