திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்த 'ஜெயிலர் 2': சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ கொண்டாட்டம்!

திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்த 'ஜெயிலர் 2': சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ கொண்டாட்டம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் 25 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் புதிய மாஸ் வீடியோவை வெளியிட்டு கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளது. அனிருத்தின் துள்ளலான இசை, மோகன்லால், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரப் பட்டாளம் என 'ஜெயிலர் 2' பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. ரஜினிகாந்தின் ஸ்டைலும் அதிரடி ஆக்ஷனும் திரையரங்குகளில் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. 25 நாட்களைக் கடந்த பின்னரும் பல திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்ட நெரிசலுடன் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் வசூலில் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் இப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியாக உருவெடுத்துள்ளது.

· Sun Pictures

பழைய செய்திகள்