கேரளாவில் 'ஜெயிலர் 2' வரலாற்று சாதனை: ரூ.40 கோடி வசூலித்து ஆல்-டைம் டாப் 2 இடத்தைப் பிடித்தது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம், கேரள பாக்ஸ் ஆபீஸில் தனது முதல் வார இறுதியில் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கேரளாவில் முதல் வார இறுதியில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக மலையாளம் ரிவ்யூ தளம் தெரிவித்துள்ளது. இப்பட்டியலில் மோகன்லாலின் 'எம்புரான்' திரைப்படம் ரூ.42.56 கோடி வசூலுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், த்ரிஷ்யம் 3 (ரூ.38.64 கோடி) மற்றும் லியோ (ரூ.32.85 கோடி) ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன. கேரள திரையரங்குகளில் ரஜினிக்கு உள்ள மாபெரும் செல்வாக்கை இந்த இமாலய வசூல் மீண்டும் நிரூபித்துள்ளது. அனைத்து காட்சிகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வரும் நாட்களிலும் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடுமுறை நாட்களிலும் குடும்ப ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
· MalayalamReview