ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2': அக்டோபர் 15 உலகமெங்கும் அலப்பறை ஆரம்பம் என சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இத்திரைப்படம் வரும் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'அலப்பறை கிளப்புறோம்' என்ற மாஸான வாசகத்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளையும் நிர்மல் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். பிரம்மாண்ட ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை காட்சிகளுடன் இப்படம் தயாராகி வருகிறது. பண்டிகை விடுமுறை காலத்தைக் குறிவைத்து அக்டோபர் 15 அன்று களமிறங்கும் ஜெயிலர் 2, பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என்று வர்த்தக வட்டாரங்கள் கணித்துள்ளன.
· Anirudhofficial