தலைவர் ரஜினியின் ஜெயிலர் 2: 'புட்டாப்பு கேங்' வைப் பாடலை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள 'ஜெயிலர் 2' படத்தின் அதிரடியான 'புட்டாப்பு கேங்' வைப் மற்றும் முழு ஆல்பம் பாடல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த அதிரடி பாடல்கள் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல் பாகத்தின் மாபெரும் வசூல் சாதனையைத் தொடர்ந்து உருவாகியுள்ள இப்படத்தில் தலைவர் ரஜினிகாந்துடன் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளது. அனிருத்தின் துள்ளலான பின்னணி இசை மீண்டும் திரையரங்குகளில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. அக்டோபர் 15 ஆம் தேதி 'ஜெயிலர் 2' திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இந்த இசை வெளியீடு ரசிகர்களின் திருவிழா மனநிலையை மேலும் எகிற வைத்துள்ளது.
· Sun Pictures