இந்திய சினிமாவில் முதல் முறை: 7 பிரீமியம் பார்மட்களில் வெளியாகும் ரஜினியின் 'ஜெயிலர் 2'!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக 7 பிரீமியம் பார்மட்களில் வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. ஐமாக்ஸ், 4டிஎக்ஸ், டி-பாக்ஸ், டால்பி சினிமா, எபிக், பார்கோ மற்றும் கியூப் ஆகிய 7 நவீன தொழில்நுட்ப வடிவங்களில் திரையரங்குகளில் படம் திரையிடப்படவுள்ளது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் பாடல்களும் பின்னணி இசையும் இந்த பிரீமியம் திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு உச்சகட்ட உற்சாகமாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான வெளியீட்டிற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ரசிகர்களுக்கு தலைசிறந்த சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் இந்த பிரீமியம் பார்மட்களில் ஜெயிலர் 2 களமிறங்குவது தலைவர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
· Sun Pictures