ஆடியோ தளங்களில் வெளியானது 'டைகர் முத்துவேல் பாண்டியன்' பிஜிஎம்: சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆடியோ தளங்களில் வெளியானது 'டைகர் முத்துவேல் பாண்டியன்' பிஜிஎம்: சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் 'டைகர் முத்துவேல் பாண்டியன்' தீம் இசை அனைத்து முக்கிய ஆடியோ தளங்களிலும் வெளியாகி ஸ்ட்ரீமிங் செய்யப்படுவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உருவாக்கியுள்ள இந்த மிரட்டலான தீம் மியூசிக், வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 'ஜெயிலர்' முதல் பாகத்தில் ரஜினியின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்த முத்துவேல் பாண்டியன் பின்னணி இசை, தற்போது அடுத்த பாகத்திலும் புதிய வீரியத்துடன் தொடர்வது ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகத்தை அளித்துள்ளது. வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என முன்னணி நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைகின்றனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் அதிரடி ஆட்டமும் அனிருத்தின் இசையும் மீண்டும் திரையரங்குகளில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

· Sun Pictures

பழைய செய்திகள்