பிரிட்டனில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 மாஸ் சாதனை: முன்பதிவிலேயே 20,000 பவுண்டுகளைக் கடந்து வேட்டை ஆரம்பம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உலகமெங்கும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரிட்டனில் இப்படம் அக்டோபர் 15 அன்று வெளியாக உள்ள நிலையில், முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 20,000 பவுண்டுகளுக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய்) வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் அதிரடி இசையில் தயாராகும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன் என நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தலைவர் முத்துவேல் பாண்டியனின் அடுத்த அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் இங்கிலாந்து திரையரங்குகளில் டிக்கெட்டுகளை முண்டியடித்து புக் செய்து வருகின்றனர். படம் திரைக்கு வர இன்னும் நாட்கள் இருக்கும் நிலையிலேயே இங்கிலாந்து பாக்ஸ் ஆபிசில் ஜெயிலர் 2 நிகழ்த்தி வரும் இந்த ஆரம்ப புயல், ஒட்டுமொத்த வெளிநாட்டு வசூலிலும் புதிய மைல்கற்களை எட்டும் என்பதை உறுதி செய்துள்ளது. திரையரங்குகளில் தலைவர் ரசிகர்களின் கொண்டாட்டம் திருவிழாவாக மாறத் தயாராகிவிட்டது.
· @_movietamil