வேட்டைக்குத் தயாரான டைகர் முத்துவேல் பாண்டியன்: நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது ஜெயிலர் 2
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர் 2' திரைப்படம் நாளை (அக்டோபர் 15) முதல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. "டைகர் மீண்டும் வந்துவிட்டார், வேட்டை தொடங்கிவிட்டது" என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அதிரடி வீடியோ அறிவிப்பு ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்த இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்துடன் வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என இந்திய அளவிலான பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. அனிருத் இசையில் உருவான பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் ஜெயிலர் 2 படத்திற்கான முதல் நாள் சிறப்புக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. தியேட்டர்களில் கட் அவுட்கள், பாலாபிஷேகம் என உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிவிட்டனர்.
· Sun Pictures