அமெரிக்காவில் 3 மில்லியன் டாலரை கடந்து ஜெயிலர் வேட்டை: உலகளவில் ஈர்க்கும் தலைவர் மேஜிக்

அமெரிக்காவில் 3 மில்லியன் டாலரை கடந்து ஜெயிலர் வேட்டை: உலகளவில் ஈர்க்கும் தலைவர் மேஜிக்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் 3 மில்லியன் டாலர் என்ற பிரம்மாண்ட வசூல் எல்லையைக் கடந்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை படைத்துள்ளது. 3 வயது குழந்தை முதல் 70 வயது பெரியவர்கள் வரை அனைத்து மொழியினரையும் இப்படம் வசீகரித்துள்ளதாக அமெரிக்க விநியோகஸ்தரான பிரைம் மீடியா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் ரஜினியின் ஸ்டைல் மற்றும் திரை ஆளுமையைக் காண திரையரங்குகளில் வரிசைகட்டி நிற்பதாக விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நெல்சன் திலீப்குமாரின் நேர்த்தியான இயக்கம், அனிருத்தின் அதிரடி பிஜிஎம் மற்றும் சிறப்பு தோற்றங்களின் மாஸ் காட்சிகள் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் குறுகிய நாட்களிலேயே 3 மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ள ஜெயிலர் திரைப்படம், வரும் வாரங்களிலும் கூடுதல் வசூல் சாதனைகளைப் படைக்கும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

· Primemediaus

பழைய செய்திகள்