ஆகஸ்ட் 10ல் வேட்டை தொடங்கும்: ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆகஸ்ட் 10ல் வேட்டை தொடங்கும்: ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய வீடியோ ப்ரோமோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஆகஸ்ட் 10 முதல் வேட்டை தொடங்கும்’ என்ற முழக்கத்துடன் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் வசந்த் ரவி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையவுள்ளன. சுதந்திர தின வார விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் ‘ஜெயிலர்’ திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வசூல் சாதனை படைக்கும் என சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

· Sun Pictures

பழைய செய்திகள்