21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஸ்டுடியோவில் ரஜினி, கமல் சந்திப்பு: இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற இரு துருவங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துப் பேசிய அரிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 'இந்தியன் 2' மற்றும் 'தலைவர் 170' படப்பிடிப்புகள் ஒரே ஸ்டுடியோவில் நடைபெற்றபோது இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இரு துருவங்களும் அருகருகே படப்பிடிப்பு தளங்களில் சந்தித்த இந்த அற்புத தருணத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளது. இந்த இரு மெகா பட்ஜெட் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரிப்பதில் பெருமை கொள்வதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. சினிமா ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ள இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து இணையத்தை அதிர வைத்துள்ளது. பல தசாப்தங்களாகத் தொடரும் இவர்களின் ஆழமான நட்பைப் பார்த்து ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடி வருகின்றனர்.
· Lyca Productions