ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்: சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்: சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் மீண்டும் ரஜினியுடன் இணைவது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் எல்லையற்ற உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க, பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் மாஸ்டர்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கின்றனர். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையும் முதல் திரைப்படம் இது என்பதால் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் தேசிய அளவில் ட்ரெண்டாகத் தொடங்கியது. தலைவர் ரசிகர்களின் பல ஆண்டு கனவு இந்த கூட்டணி மூலம் நனவாகியுள்ளது. முழுக்க முழுக்க விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிப்பு குறித்த விவரங்கள் மிக விரைவில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

· Dir_lokesh

பழைய செய்திகள்