'பாட்ஷா 2', 'பேட்ட 2' வேண்டாம் என்றேன்: 'ஜெயிலர் 2' ஒப்புக்கொண்ட காரணத்தை பகிர்ந்த ரஜினி!
தனது மெகா ஹிட் திரைப்படங்களான 'பாட்ஷா' மற்றும் 'பேட்ட' ஆகியவற்றின் இரண்டாம் பாகங்களை நிராகரித்த தான், 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான முக்கிய காரணத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியுள்ளார். ஜெயிலர் 2 சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், பாட்ஷா மற்றும் பேட்ட படங்களின் வெற்றிக்குப் பிறகு அவற்றின் தொடர்ச்சியை உருவாக்குவது தொடர்பாக பல ஆலோசனைகள் வந்தபோதும் தான் அவற்றை ஏற்கவில்லை என்று கூறினார். ஆனால் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2 கதையின் ஒரு குறிப்பிட்ட பிரம்மாண்ட காட்சியைத் தன்னிடம் விவரித்த விதம் மிகவும் பிடித்திருந்ததால், உடனே இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகக் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். நெல்சனின் புதுமையான திரைக்கதை அணுகுமுறை தன்னை வெகுவாகக் கவர்ந்ததாக அவர் கூறினார். ரஜினியின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், திரையில் நெல்சன் என்ன புதிய ஆக்ஷன் வித்தையைக் காட்டியுள்ளார் என்பதைப் பார்க்கும் பேராவலையும் ரசிகர்களிடையே தூண்டியுள்ளது.
· @xpresscinema