கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் அமரன்: ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டிய சுவாரசிய த்ரோபேக்!
மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு உருவான 'அமரன்' திரைப்படத்தைப் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ந்து பாராட்டிய சுவாரசியமான நினைவுகளை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் த்ரோபேக் பதிவாகப் பகிர்ந்துள்ளார். 2024 தீபாவளிக்கு வெளியான இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்த ரஜினிகாந்த், உடனடியாக தனது நெருங்கிய நண்பரான கமல்ஹாசனை தொலைபேசியில் அழைத்து, இப்படி ஒரு காவியப் படத்தை தயாரித்ததற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன் மற்றும் ஒளிப்பதிவாளர் சாய் ஆகியோரைத் தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து தட்டிக் கொடுத்து வாழ்த்தினார். சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்த அமரன் திரைப்படம், வசூலிலும் விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த் நேரில் பாராட்டிய அந்த தருணத்தை நினைவுகூர்ந்து ரசிகர்கள் இப்போதும் சமூக வலைதளங்களில் அந்த அரிய புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
· Actor Kayal Devaraj