பொன்னியின் செல்வன் விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்: கமலஹாசன், மணிரத்னம் முன்னிலையில் கலகல பேச்சு!

பொன்னியின் செல்வன் விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்: கமலஹாசன், மணிரத்னம் முன்னிலையில் கலகல பேச்சு!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான வரலாற்று காவியமான 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய உற்சாகமான உரை இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்கள் தொடர்பு பிரதீஷ் சேகர் எக்ஸ் தளத்தில் ரஜினிகாந்தின் உரை வீடியோவை பகிர்ந்துள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் ஒரே மேடையில் தோன்றி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். கல்கியின் நாவலை மணிரத்னம் திரைப்படமாக மாற்றிய விதம் குறித்தும், அதில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் விருப்பம் தெரிவித்தும் மணி மறுத்த நகைச்சுவை சம்பவத்தையும் ரஜினி மேடையில் கலகலப்பாகப் பகிர்ந்தார். சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா ஆகியோர் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் இந்த மேடை நிகழ்வு சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு கலை விருந்தாக அமைந்தது.

· Propratheesh

பழைய செய்திகள்