சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளில் வெளியான தலைவர் 170 டைட்டில்: வேட்டையன் டீசர் இணையத்தில் தீயாய் பரவல்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதிரடியான சிறப்பு டீசர் ஒன்றையும் படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜெய் பீம் புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளது. அனிருத்தின் சுறுசுறுப்பான இசையில், கையில் துப்பாக்கியுடன் கூலிங்கிளாஸ் அணிந்து ரஜினி காட்டும் ஸ்டைல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. சுபாஸ்கரன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வேட்டையன் திரைப்படம், சமூக அக்கறையும் மாஸ் பொழுதுபோக்கும் கலந்த ஒரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டைட்டில் அறிவிப்பு உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
· Anbariv