அக்டோபர் 10 வேட்டையன் ரிலீஸ் நினைவுகள்: எக்ஸ் தளத்தில் கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பிய 'வேட்டையன்' திரைப்படம் வெளியான அக்டோபர் 10 தேதியை நினைவுகூர்ந்து, நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் சிறப்புப் பதிவை வெளியிட்டுள்ளார். அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்தப் படத்தில் ரஜினியின் எஸ்பி அத்தியன் ஐபிஎஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக அனிருத்தின் இசையில் உருவான 'மனசிலாயோ' பாடல் திரையரங்குகளைக் கொண்டாட்டக் களமாக மாற்றியது. வேட்டையன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய ஆரவாரத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தற்போது மீண்டும் பகிர்ந்துகொண்டு கொண்டாடி வருகின்றனர்.
· Actor Kayal Devaraj