அமல் நீரத் இயக்கும் 'பேச்சுலர் பார்ட்டி 2': ரஜிஷா விஜயனின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது!

அமல் நீரத் இயக்கும் 'பேச்சுலர் பார்ட்டி 2': ரஜிஷா விஜயனின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது!

இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'பேச்சுலர் பார்ட்டி டூ' (Bachelor Party DEUX) படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் ஏற்றுள்ள 'சிம்பிள்' என்ற கதாபாத்திரத்தின் அறிமுக போஸ்டரை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமல் நீரத் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென், குஞ்சாக்கோ போபன், டோவினோ தாமஸ், சௌபின் சாஹிர், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். மலையாள சினிமாவில் தனித்துவமான மேக்கிங் பாணிக்கு பெயர் பெற்ற அமல் நீரத்தின் இயக்கத்தில் உருவாகும் இந்த காமெடி ஆக்‌ஷன் படம் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்ணன் பட புகழ் ரஜிஷா விஜயன் இப்படத்தில் இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் தோன்றவுள்ளார் என்பதை இந்த போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் சவுத் கைப்பற்றியுள்ள நிலையில், மற்ற கதாபாத்திரங்களின் லுக் போஸ்டர்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Sony Music South

பழைய செய்திகள்