‘ராமாயணம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம்: தெலுங்கு விழாவில் ரகுல் பிரீத் சிங் நெகிழ்ச்சி!

‘ராமாயணம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம்: தெலுங்கு விழாவில் ரகுல் பிரீத் சிங் நெகிழ்ச்சி!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படமான ‘ராமாயணம் பார்ட் 1’ தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் தெலுங்கு பிரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை ரகுல் பிரீத் சிங், இப்படத்தில் நடித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ள வீடியோவை மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். மேடையில் பேசிய ரகுல் பிரீத் சிங், "இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தில் மிக முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இப்படத்தில் ராவணனின் சகோதரியான சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கதையின் முக்கிய திருப்புமுனையாக அமையும் இந்தக் கதாபாத்திரத்தில் ரகுலின் நடிப்பு நிச்சயம் ரசிகர்களைக் கவரும் என்று திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது. நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் ‘ராமாயணம் பார்ட் 1’, இந்தியத் திரையுலகின் மிக பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாகத் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. பல்வேறு மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் மற்றும் அடுத்தடுத்த முக்கிய அப்டேட்டுகளைப் படக்குழு விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்