ராமாயணம் படத்தில் சூர்ப்பநகையாக ரகுல் ப்ரீத் சிங்: போஸ்டர் வெளியாகி இணையத்தில் வரவேற்பு!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள ராமாயணம் படத்தில் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஜனஸ்தானின் இளவரசி, சூர்ப்பனகை என்ற அடைமொழியுடன் அவரது பிரத்யேக போஸ்டரை படக்குழு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், சன்னி தியோல் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது. காவிய இதிகாசத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங்கின் தோற்றம் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளனர். தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 5-ஆம் தேதி ராமாயணம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. திரையரங்க முன்பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த போஸ்டர் மேலும் எகிற வைத்துள்ளது.
· Idiamondbabu