விக்ரம் தெலுங்கு டிரெய்லரை வெளியிடும் ராம் சரண்: பிரம்மாண்ட வெளியீட்டு அப்டேட்!

விக்ரம் தெலுங்கு டிரெய்லரை வெளியிடும் ராம் சரண்: பிரம்மாண்ட வெளியீட்டு அப்டேட்!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான விக்ரம் ஹிட்லிஸ்ட் படத்தின் டிரெய்லரை மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார். இதனை தெலுங்கு விநியோகஸ்தரான ஸ்ரேஷ்ட் மூவீஸ் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட அதிரடி திரைப்படத்தில் கமல் ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் இணைந்து நடித்துள்ளனர். அனிருத்தின் துடிப்பான பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. வரும் ஜூன் 3 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள இப்படத்தின் தெலுங்கு பதிப்பை நடிகர் நிதினின் ஸ்ரேஷ்ட் மூவீஸ் நிறுவனம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடுகிறது. ராம் சரண் டிரெய்லரை வெளியிடுவது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

· Sreshthmovies

பழைய செய்திகள்